திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் மற்றும் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலை கழகத்திற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தேர்வுக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்னை தெரசா பெண்கள் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி முதல்வர் மஞ்சுளா, காந்திகிராம ஊரக பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பங்கஜம், திருச்சி பாரதிதாசன் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் தேர்வு குழுவில், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தலைவர் கண்ணன், வழக்கறிஞர் அகமதுகான், நாகராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரை செய்வர்.
No comments:
Post a Comment