மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை 28ம் தேதி நடக்கிறது. காலை 8 மணிக்கு துவங்கும் முதற்கட்ட கவுன்சிலிங்கில் தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள பி.பார்ம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பின், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவங்குகிறது.
8:30 மணிக்கு கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 181.666 வரை, 9:30 மணிக்கு 181.333 முதல் 171.666 வரை, 10:30 மணிக்கு 171.333 முதல் 162.166 வரை, 11:30 மணிக்கு 162 முதல் 153.666 வரை, 12:30 மணிக்கு 153 முதல் 142 வரை , 2:30 மணிக்கு 141.666 முதல் 130.333 வரை, 3:30 மணிக்கு 130 முதல் 115.500 வரை, 4:30 மணிக்கு 115.333 முதல் 91.667 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடக்கிறது.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மொத்தம் 4,308 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அழைப்பு கடிதம் கிடைக்காவிட்டாலும் தர வரிசை பட்டியலில் தங்கள் பெயர் இருப்பின், கவுன்சிலிங்கில் தங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்கலாம். அனைத்து சான்றிதழ்களின் ஒரு செட் நகலை எடுத்து வர வேண்டும். முதன் முறையாக கவுன்சிலிங்கில் சீட் எடுக்க உள்ளவர்கள் 850 ரூபாய்க்கு டி.டி.,யுடன் வர வேண்டும். எஸ்.சி.,பழங்குடியினர் 350 ரூபாய்க்கு எடுத்தால் போதுமானது.
ஏற்கனவே கவுன்சிலிங்கில் சீட் எடுத்து மீண்டும் கவுன்சிலிங் பங்கேற்க வரும் மாணவர்கள் 750 ரூபாய்க்கு டி.டி.யுடன் வர வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி,பிரிவினர் 300 ரூபாய் எடுத்தால் போதுமானது. இந்த டி.டி.,கவுன்சிலிங் கட்டணம் திரும்ப கிடைக்காது.
No comments:
Post a Comment