மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில், பல்வேறு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் கனவு வடிவமைப்பு என்ற தலைப்பில் தொழில்நுட்ப வகுப்புகள், பயிற்சி கொடுத்தனர்.
சென்னை ஐ.ஐ.டி., இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சுந்தர் தலைமையில், ராகேஷ்கமல், சுதர்சன், பிரித்திவிராஜ், அபுபக்கர், ரோகன், விஷ்ணு, சோஹம் ஆகியோர், வலைதள வளர்ச்சி, ரோபோடிக்ஸ், கம்ப்யூட்டர் கோடிங் தேர்வு, எளிய பார்முலா மூலம் க்யூப் தீர்வு, பழைய பொருட்களை ஒன்றிணைத்து வடிவமைத்தல் தலைப்புகளில் விளக்கமும், தொழில்நுட்ப பயிற்சியும் அளித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கூறுகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர்களுக்கு பல கோடி ரூபாயில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அவர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து இந்தியா முழுவதும், ஐ.ஐ.டி., சார்பில் சம்பர்க் எனும் தலைப்பில் சாஸ்தா தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் மதுரை உட்பட பல நகரங்களில் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களின் திறமை மேலும் வளர்ச்சி பெற உதவும் என்றார்.
No comments:
Post a Comment