மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன.
90 சதவீதம் பேர் பங்கேற்றனர். தேர்வு பணிகளை, மண்டல இயக்குனர் மோகனன் தலைமையிலான பேராசிரியர் குழுக்கள் கண்காணித்தன.மோகனன் கூறுகையில், "இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பில் சேர, ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே இருந்த 'பட்டப் படிப்புடன் 2 ஆண்டுகள் ஆசிரிய ராக பணி அனுபவம் இருக்க வேண்டும்' என்பது எடுத்துக்கொள்ளப்படவில்லை," என்றார்
No comments:
Post a Comment