தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.இந்த ஆண்டு, 1,750 இடங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை கணிதம், நாளை மறுநாள் இயற்பியல் மற்றும் வேதியியல், அக்., 1ம் தேதி தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.அக்., 3ம் தேதி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல், அக்., 5ம் தேதி வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் 'ஹோம் சயின்ஸ்' என்ற மனை அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment