வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல் இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, விருப்ப மாறுதலும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, பல போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, விருப்ப மாறுதல் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன் விடுத்துள்ள அறிக்கையில், 'இடமாறுதல் நடத்த உத்தரவிட்ட அரசு, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.
2 comments:
மேல் நிலைப்பள்ளிகளில் 1980முதல் பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றமும் (transfer )பதவி உயர்வும் இன்று வரை வழங்கப்படவில்லை. மேல் நிலை ஆசிரியர்களில் இரண்டாம்தர குடிமகன்களாகவே நடத்தப்படடு வருகின்றனர்.

Post a Comment