தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
போராடினால் ஒழுங்கு நடவடிக்கை:
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க, பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள், பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வரும், 8ம் தேதி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அதிகாரிகள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கங்களை அழைத்து, எதிர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர் என, பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment