மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாககலந்தாய்வு நடந்தது; ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, சில தினங்களுக்கு முன்அனுமதி கிடைத்தது.
இதில், 65 இடங்கள் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.மேலும், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 4; பி.டி.எஸ்., - 10; சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - 40, பி.டி.எஸ்., - 213 என, மொத்தம், 332 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, 26, 27ம் தேதிகளில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடக்கிறது. மேலும் விவரங்களை, www.tn.health.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment