Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 25, 2015

    அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை

    அரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் எழுதலாம்.
    2012 வரை டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டன. 'ஆன்லைன்' விண்ணப்பிக்கும் முறையால் 2013 டிசம்பரில் தேர்வு நடத்தாமல், 2014 மே மாதத்தில் நடத்தப்பட்டது. இனி தொழில்நுட்பத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படவில்லை.
    அதன்பின் மூன்று மாதங்கள் கடந்தும் தேர்வை நடத்தாமல் கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. மேலும் 2014 ல் நடந்த ஓவியத்தேர்வில் 100 மாணவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை.தமிழ்நாடு குழந்தைகள் ஓவிய மன்றத் தலைவர் நல்லகாசிராஜன் கூறியதாவது: கல்வித்துறை தொழில்நுட்பத் தேர்வுகளை விரைந்து நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகளில் தேர்வு நடத்த அனுமதிக்க கூடாது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர், இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

    No comments: