தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இயக்குனர் அலுவலகத்தில் 23.09.2015 புதன் மாலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை பொதுசெயலர் திரு செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் சந்தித்தனர்.அப்போது இயக்குனர் பொதுசெயலரினை அவரது இருதய அறுவை சிகிச்சைக்கு முடித்து 6 மாத ஓய்வுக்குபின் சந்திப்பதில் தனது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் அவர் பூரண நலம் பெற்றமைக்குவாழ்த்துகள் கூறி மகிழ்ந்தார். பின்னர் பொதுசெயலர் ஆசிரியர் சார்ந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாகக்கூறி விளக்கம் தந்து விவாதித்தனர் உடன் மாநில தலைவர் திரு மணி,மாநில பொருளாளர்.திரு அலெக்சாண்டர், தலைமை நிலையச்செயலர் திரு சாந்தகுமார், இதழாசிரியர் திரு. வடிவேலு மற்றும் பரமத்திவட்டாரத்தலைவர் திரு கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளும் இயக்குனர் பதிலும் கோரிக்கைகள்.
1.ஆசிரியர்கள் மேல்படிப்பு முடித்து முன்னனுமதி பெறாமை-பல விண்னப்பங்கள் தொகுக்கப்பட்டு இயக்குனர் அலுவலகத்துக்கு அனைத்து ஒன்றியங்களின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு பலநாட்கள் ஆகியும் அதன் மீதான நடவடிக்கை தாமதத்தால் பலஆசிரியர்களின் பதவி உயர்வும்,ஊக்க ஊதிய உயர்வும் பெறாமல் வருத்தத்தில் உள்ளது சுட்டிக்காட்டப்பட்டு விரைவான ஆணை வேண்டப்பட்டது
இயக்குனர் விளக்கம்
தமிழகம் முழுவதில் இருந்தும் சுமார் 3500 க்குமேலான விண்னப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அது குறித்து உரிய அரசாணை வெளியிடக்கோரி கல்வித்துறை செயலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்
2. தமிழகம் முழுவதும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ல பணியிடங்களுக்கு மீண்டும் ஒரு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.அதில் ஆகஸ்ட் 1ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் கலந்தாய்வின் மூலம் பதவி உயர்வு மற்றும் மாறுதல்கள் ஆகஸ்ட்-15ல் நடைபெற்ற பின்பு பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றிற்கு மீண்டும் ஒரு முறை மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என்றும்.
மேலும் நடத்தப்பட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள ஜூன் முதல்தேதியை கணக்கிட்டு ஓர் ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனை காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவ்வாண்டு நடந்த கலந்தாய்வில் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.எனவே தகுதி நாளை ஆகஸ்ட்டு முதல் தேதியைக்கொண்டு ஒர் ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும் என மாற்றம் செய்து நடத்தப்படும் கலந்தாய்வில் சென்ற ஆண்டில் கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படல் வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இயக்குனர் பதில்
நடந்து முடிந்த கலந்தாய்வு எந்தவித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் நடத்தப்பட்டது.இது நாம் பெருமை அடைய வேண்டிய விடயம் என்று கூறி விரைவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
3. தமிழகம் முழுவதும் உள்ள உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்குவழங்கப்படும் கனிணி பழுதுபார்க்கும்மற்றும் பராமரிப்புத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்
தமிழகம் முழுவதும் ஒன்றியத்திற்கு ஓர் உதவிக்கல்வி அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள்,உதவி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் என ஒன்றியத்திற்கு 700 மேற்பட்ட் ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர அரசு பணப்பலன்கள் பெற்று வழங்கவும்,அரசினால் அவ்வப்போது கேட்கப்படும் கல்வி சம்மந்தப்பட்ட புள்ளி விவரங்கள் தொகுத்து வழங்கவும் தொடக்கக்கல்வித்துறையின் கல்வி மேம்படவும் வழிகாட்டியாக இவ்வலுவலகம் செயல்பட்டு வருகிறது,
ஆயினும் இவ்வலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனிணிகள் பழுதுபார்க்கும் மானியம் என வருடத்திற்கு ரூ-6000/- மட்டுமே வழங்கப்படுகிறது.இத்தொகை யானைக்கு அளிக்கப்படும் சோளப்பொறி போன்று குறைவாக உள்ளது. மாதந்தோறும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியப்பட்டியல் தயாரிக்கவே மாதம் ஒன்றுக்கு ரூ-1000/- வரை செலவு செய்ய வேண்டியதாக உள்ளது என உதவி தொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் புலம்புவதில் நியாயம் உள்ளதாகவே தெரிய வருகிறது.
இதனால் அதிகப்படியாகும் செலவினை ஈடுசெய்ய ஆசிரியர்கள் அதனை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை சில ஒன்றியங்களில் உள்ளதாக அறியப்படுகிறது.மேலும் இது கையூட்டுக்கும் வழிவகுப்பதாக அமைகிறது.எனவே உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் கனிணி பராமரிப்புத்தொகையினை ஆண்டுக்கு ரூ-30,000/- என உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனரை என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.
இயக்குனர் பதில்
தாங்கள் கோரிய தொகை அதிகமாக் உள்ளது.எனினும் தற்போது ஒதிக்கீடுசெய்யப்படும் தொகையை விரைவில் கூடுதலாக உயர்த்திதர தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
4. அரசாணை எண்-25 (இளையோர் மூத்தோர் ஊதியம் சமன்படுத்துதல்) க்கு விளக்கமான தெளிவுரை மற்றும் இயக்குனர் செயல்முறை ஆணை வெளியிடக்கோரிக்கைவைக்கப்பட்டது.
இயக்குனர் பதில்
உடனடியாக இது குறித்து பிற அலுவலர்களிடம் கலந்துப்பேசி தெளிவுரையுடன் கூடிய செயல்முறை ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளித்தார்
5.சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் வைத்தீஸ்வரா நிதியுதவி பெறும் பள்ளியில் தாளாளர் மாற்றம் அனுமதி விண்ணப்பிக்கப்பட்டும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி தாமதம் காரணமாக அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டு உடன் ஊதியம் வழங்க நடவடிக்கை கோரப்பட்டது.
இயக்குனர் பதில்
இயக்குனர் சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடன் ஊதியம் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளகேட்டுக்கொண்டார். இயக்குனர் இச்செயல்பாட்டுக்கு மாநில பொறுப்பாளர்கள் மனதார நன்றி தெரிவித்தனர்.
6. திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரம் இராகல்பாவி தொடக்கப்பள்ளி ஆசிரியர் .திரு.கண்ணபிரான் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனத்தில் டெலஸ்கோப்பிக் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அப்பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக 15 நாட்கள் பணி விடுப்பு வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இயக்குனர் பதில்
தனது நேர்முக உதவியாளரை இயக்குனர் உடன் அழைத்து திருப்பூர் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரை உடன் தொடர்புகொண்டு சமந்தப்பட்ட ஆசிரியருக்கு விடுப்பு வழங்கி உத்திரவிடுமாறு அறிவுரை வழங்கினார்.மேலும் இது போன்ற ஆர்வமுள்ள ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதுடன் அனைத்து சங்கங்களும் தமது இயக்க கூட்டங்களில் அவர்களை அழைத்து பாரட்டுதல்கள் வழங்கி மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்
7.பள்ளிகளில் வகுப்புகளுக்கு நீதிபோதனா பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இயக்குனர் பதில்
நீதிபோதனை என்ற பாடவேளை தேவை இல்லை எனவும், பாட போதனையின் போதே நீதிக்கருத்துகளை செய்தியாக கூறாமல் செயல் சார்ந்து கூறினால் அவற்றின் மீது மாணவர்களின் ஆர்வம் ஈர்க்கப்படும் என்று கூறினார். மேலும் பள்ளி வளாகம்,வகுப்பறை போன்றவற்றினை தூய்மையாக வைத்துக்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்
மேலும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மன ரீதியான அழுத்தங்களிலிருந்து விடுபட்டு மிக மகிழ்ச்சியாக சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் .கல்வித்துறையில் மட்டுமே ஆசிரியர்களுக்கு எவ்வளவு திறமைகள் உள்ளதோ அதனை முழுமையாக பயன் படுத்தி மாணவர்களை மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேற்றலாம் என்று கூறியதுடன் சங்க பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
8. நாமக்கல் மாவட்ட 77 தலைமை ஆசிரியர்களின் மேல்முறையீட்டு மனுவின் மீது அவ்வாசிரியர்களின் மனுவினை பரீசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுசெயலர் கேட்டுக்கொண்டார்
இச்சந்திப்பு மிக நீண்ட நேரம் மகிழ்ச்சியாக ஓர் கலந்துரையாடலாக அமைந்தது.மேலும் இயக்குனருக்கு நன்றிபாராட்டியும் கோரிக்கைகள் மீது விரவான நடவடிக்கை வேண்டியும் விடைபெற்றனர்.
No comments:
Post a Comment