தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது. தமிழக அரசின் சுற்றுலா துறையில் இதுவரையில் சுற் றுலா அதிகாரிகளும், உதவி சுற்றுலா அதிகாரிகளும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப் பட்டு வந்தனர். தற்போது முதல் முறையாக டிஎன்பிஎஸ்சி போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய் யப்பட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன் பிஎஸ்சி) தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’ நிருபரிடம் நேற்று கூறியதாவது:
சுற்றுலா அதிகாரி பதவியில் 24 காலியிடங்களும், உதவி சுற்றுலா அதிகாரி பணியில் 70 காலியிடங்களும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. சுற்றுலா அதிகாரி பணிக்கு சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை படிப்பில் சுற்றுலா பாடத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டத்துடன் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல், உதவி சுற்றுலா அதிகாரி பணிக்கு சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மையில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
சுற்றுலா அதிகாரி பணியிடங் கள் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியா ரிட்டி) அடிப்படையில்தான் நிரப் பப்பட்டு வந்தன. தற்போதுதான் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றத்தில்..
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் நேர்முக உதவியாளர் (32 காலியிடம்), உதவி பிரிவு அதிகாரி (25 இடங்கள்) மற்றும் உதவியாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுமா? அல்லது உயர் நீதிமன்றம் மூலமாக நிரப்பப்படுமா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment