தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.சொக்கலிங்கம்,ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு,உரிமை மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின்படி, அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போதும், பதவி உயர்வு வழங்கும்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த சட்ட விதிகளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 8–ந் தேதி தீர்ப்பு அளித்துள்ளது. அதில், ‘ஏ’ முதல் ‘டி’ பிரிவு வரையிலான பணிகளுக்கு இந்த 3 சதவீத இடஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் ஆகிய பதவிகளுக்கு கடந்த ஆகஸ்டு 14–ந் தேதி முதல் கவுன்சிலிங் நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த பதவி உயர்வில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் கோவி ராமலிங்கம் ஆஜரானார்.
No comments:
Post a Comment