தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பத்து நாட்கள் குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும். வழக்கமாக தொடக்கக் கல்வித்துறையை பொருத்தவரையில் இந்த குறுவள மைய பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கருதப்படும் அந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வர்.
இந்த பயிற்சி நாட்களை மொத்த வேலை நாட்களில் இருந்து கழிக்கப்படும். 2013-14ஆம் கல்வியாண்டிற்கான குறு வள மைய பயிற்சி நாட்கள் மூன்றாக குறைத்து அரசு உத்தரவிட்டது, மேலும் பயிற்சியில் ஒவ்வொரு குறுவள மையத்திலும் 100% ஆசிரியர்களுக்கு பதிலாக 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் பயிற்சி நாளன்று பள்ளி வேலை செய்யுமா அல்லது விடுமுறையாக கொள்ளப்படுமா என்று குழப்பமடைந்துள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அறிவிக்காததால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறை பொருத்தவரை குறு வள மைய பயிற்சி நாள், பள்ளி வேலை நாளாக கருதப்படுவதால் அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து இறுதி முடிவு அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 comment:
மாநிலம் முழுவதும் சி.ஆர்.சி ஒரே சீராக நடப்பது போல் பள்ளி வேலை நாட்களும் இயக்குநரால் சீராக அறிவிக்கப்பட வேண்டும்.
Post a Comment