தமிழுக்கென உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம் தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழியை உலகறிய செய்யவும், தமிழ் மொழி சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் இப்பல்கலைக்கழகம் 1,000 ஏக்கரில் கட்டப்பட்டு 1981 செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று
திறக்கப்பட்டது. இதன் முதல் துணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம¢ நியமிக்கப்பட்டார்.இத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது, சிற்பத்துறை, ஓலைச்சுவடித்துறை, கட்டிடக் கலைத்துறை, சித்த மருத்துவத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, மெய்யியல் துறை, தொல் அறிவியல் துறை, நாடகத்துறை, மொழிபெயர்ப்புத்துறை, அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை, தூயத் தமிழ் அகர முதலித் திட்டம், இந்திய மொழிகள் பள்ளி, இசைத்துறை, பெருஞ்சொல்லதிகாரத்துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, மலையின மக்கள் ஆய்வு மையம், அரிய கையெழுத்து சுவடித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, கல்வியியல் துறை உள்ளிட்ட பல துறைகள் இயங்கி வருகின்றன.
தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் பல்வேறு பாட பிரிவுகளும் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகம் கட்டப்பட்டபோது பல்கலைக்கழக வளாகத்தில் த&மி&ழ்&நா&டு என்ற எழுத்துகளின் வடிவில் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழ் எழுத்துகளில் சிறப்பு மிக்க எழுத்தான “ழ்’’ வடிவில் மட்டும் கட்டிடம் கட்டப்பட்டு தற்போது மொழிப்புலமாக இயங்கி வருகிறது. தற்போது பல்கலைக்கழகத்தில் நூலகத்திற்கு இடதுபுறத்தில் “மி’’ என்ற எழுத்து வடிவில் கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.நான்கு மாதங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், த& நா& டு ஆகிய எழுத்துகள் வடிவிலும் கட்டிடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

No comments:
Post a Comment