Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 12, 2013

    ஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...

    இந்த உலகம் முழுவதும் வாழும் சுமார் 100 கோடி மக்கள், தங்களின் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள். இன்றைய வர்த்தக உலகில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாததாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில், ஆங்கிலத்தில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய இளைஞர்களுக்கு அளவேயில்லை.
     
    அவர்கள் பலவிதமான வழிகளை, அதன்பொருட்டு, முயற்சித்துப் பார்க்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வியடைகிறார்கள்.

    வெற்றியடைந்தவர்கள் எப்படி சாதித்தார்கள்? தோல்வியடைந்தவர்கள், எதனால் தோல்வியடைந்தனர் என்பதற்கான காரணங்களை அறிதல் நல்லது. ஆங்கிலத் திறனை சிறப்பாக மேம்படுத்திக் கொள்வதற்கான 7 முக்கிய செயல்முறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால், பேருதவியாக இருக்கும். அவைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.

    இலக்கு நிர்ணயித்தல்

    ஆங்கிலத்தை சிறப்பான முறையில் பேச பழகிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி நாம் யோசிக்கையில் ஒன்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எடுத்தவுடனேயே, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பேசுவது போன்று பேச வேண்டும் என்று முயற்சிக்கக்கூடாது.

    மாறாக, எதுபோன்ற விஷயங்களில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டு, அவற்றை சரிசெய்ய முயல வேண்டும். இலக்கணம், உச்சரிப்பு மற்றும் வார்த்தை வளம்(Vocabulary) உள்ளிட்ட விஷயங்களில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிறப்பாக ஆங்கிலம் பேசுவது என்பது, ஆங்கிலேயர் போல பேசுதல் என்பது அர்த்தமல்ல. இலக்கணப் பிழை அல்லாமல், தெளிவாக, திணறாமல் பேசுவதே ஆகும். தேவையற்ற ஸ்டைல் தேவையில்லை.

    ஆங்கிலத்தில் பேசுதல்

    நீங்கள் தவறாக பேசினாலும் பரவாயில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஆங்கிலத்தில் பேசிப் பழகுங்கள். பேசப் பேசத்தான் ஆங்கிலம் மட்டுமல்ல, எந்த மொழியும் நன்றாக பழகும். எனவே, உங்களின் குடும்பம், நண்பர் வட்டம், பள்ளி தோழர்கள், கல்லூரி தோழர்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு நபர்களிடமும், பல்வேறு இடங்களிலும் ஆங்கிலத்தில் பேசுங்கள்.

    ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களிடம் பேசுகையில், உங்கள் தவறுகளை, அவர்களை சரிசெய்யும்படி கேட்டுக்கொண்டு, அவர்களின் உதவியைப் பெற தயங்கக்கூடாது. உங்களின் ஆங்கில அறிவைப் பற்றிய Feedback -ஐ அவ்வப்போது கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்களின் முயற்சியைத் தொடர வேண்டும். நாட்கள் செல்ல செல்ல, புலமை விரிவடைவதோடு, உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    சிறப்பாக கவனித்தல்

    ஒரு நாணயத்தின் இரு பக்கங்களும் எப்படி முக்கியமானதோ, அதுபோல்தான், பேசுவதும் - கவனிப்பதும். தொடர்ந்து பேசுவது எந்தளவு உங்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துமோ, அதேஅளவு, ஆங்கில நிகழ்ச்சிகளை கவனித்தல், ஆங்கில செய்திகளைக் கேட்டல், பாடல் கேட்டல், படத்தை ஊன்றி பார்த்தல் உள்ளிட்ட கவனிப்பு நடவடிக்கைகள், ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதில் பெரிதும் துணைபுரியும்.

    கவனித்தல் என்பது, ஒரு மொழியின் உள் அம்சங்களை புரிந்துகொள்ள துணைபுரியும். அதாவது, அதன் ஒலித்திறன், இசைத்தன்மை உள்ளிட்ட அம்சங்களை அறிந்துகொள்ளலாம்.

    படிப்பதும் அவசியம்

    ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொள்ள விழையும் ஒருவர், ஆங்கிலத்தில் அதிகம் படிப்பது இன்றியமையாதது. தரமான, ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பது, உங்களுக்குப் பிடித்த துறையைச் சேர்ந்த நல்ல ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பது, ஏதேனும் பட்டப்படிப்பை மேற்கொண்டால், அதை ஆங்கில வழியில் படிப்பது போன்றவை, ஆங்கில வாசிப்புத் திறனை அதிகப்படுத்தி, நல்ல வார்த்தை வள அறிவையும் வழங்கும். இதன்மூலம், ஒரு ஆங்கில விஷயத்தை, எளிதில் வாசித்து புரிந்துகொள்ளும் வகையில் பக்குவம் ஏற்படும்.

    வார்த்தை வள மேம்பாடு

    ஆங்கிலத்தைப் படிக்கையில், தெரியாத வார்த்தைகள் இருந்தால், அதை தனியே எழுதி, அதன் அர்த்தத்தை அருகிலேயே எழுதிக்கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் புதிய வார்த்தையை, அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் அது மறக்காது.

    இன்னொரு தவறான நம்பிக்கை ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நல்ல ஆங்கில பேச்சாளர் என்பவர், கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, நீண்ட வாக்கியங்களில் பேச வேண்டும் என்பதுதான் அது. இந்த எண்ணத்தை முதலில் களைய வேண்டும்.

    எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, சிறிய வாக்கியங்களின் மூலம், இலக்கணப் பிழையின்றி தெளிவாக பேசும் ஆங்கிலமும் சிறந்த ஆங்கிலம்தான். ஒருவகையில் சொல்லப்போனால், அந்த வகையான ஆங்கிலத்தைதான் பெருவாரியான மக்கள் விரும்புகிறார்கள். KISS என்ற வார்த்தைக்கு Keep It Short and Simple என்று பொருள். இதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

    உச்சரிப்பு தெளிவு

    ஆங்கிலம் மட்டுமல்ல. எந்த மொழியானாலும், அதைப் பேசுகையில், நல்ல உச்சரிப்பு என்பது ஒரு அத்தியாவசியமான அம்சம். பிறரின் கவனிப்பையும், பாராட்டையும் பெற்றுத் தருவதில் உச்சரிப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் பயிற்சியில், உச்சரிப்பும் ஒரு பிரதான அம்சம்.

    உச்சரிப்பை மேம்படுத்துவதில் கவனித்தலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பயிற்சி CD -களை வாங்கி கேட்டல், Stress, Syllable உள்ளிட்டவைகள் பற்றி விளக்கக்கூடிய CD -களை வாங்கி தொடர்ந்து கேட்டல் போன்றவை உங்களின் உச்சரிப்புத் திறனை வளப்படுத்த பேருதவி புரியும்.

    பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சிகளில் பார்த்து, உச்சரிப்புகளைக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலம் நன்கு தெரிந்த சிலருக்குள், உச்சரிப்பு வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் கண்டறியலாம். அதுபோன்ற சமயங்களில், எது சரி என்பதை உறுதி செய்வதும் அவசியம்.

    எப்போதுமே, முக்கியமான இடங்களில் பேசுகையில், தேவையற்ற Jargons மற்றும் Slang ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    குரலைப் பதிவு செய்தல்

    நீங்கள் பேசும் அல்லது வாசிக்கும் ஆங்கிலத்தை பதிவுசெய்து வைத்து, பின்னர் அதை கவனிக்கவும். இதன்மூலம் உங்களின் நிறை-குறைகளை சிறப்பாக அவதானிக்கலாம். இதன்மூலம், உங்களின் உச்சரிப்பு மட்டுமன்றி, இலக்கண சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்களையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    உங்களுக்கு நீங்களே பேசிக்கொள்ளல்

    கண்ணாடி முன்னால் நின்று பேசிக்கொள்ளுதல் ஒரு சிறப்பான உபாயமாகும். இதன்மூலம், முகபாவனை, உடல் மொழி ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம்.

    ஐயோ, தவறாக பேசிவிடுவோமா என்ற பயத்தில், ஆங்கிலத்தை பலபேர் பேசுவதையே தவிர்க்கின்றனர். இது மிகப்பெரிய தவறு. தோல்விகள் அல்லாத வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு தவறின் மூலமும், நீங்கள் ஒன்றை கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறத்தல் கூடாது. ஆங்கிலம் மட்டுமல்ல, எந்தவொரு மொழியை கற்றுக்கொள்ளவும், பொறுமை, விடாமுயற்சி, நல்ல கவனிப்புத் திறன், கட்டுக்கடங்காத ஆர்வம் போன்ற பண்புகள் இன்றியமையாதவை. ஒரு மாதத்தில் அல்லது சில மாதங்களில் ஆங்கிலத்தை சிறப்பாக கற்றுக்கொண்டு விடலாம் என்று நினைப்பதும் தவறு.

    அவரவர் திறனைப் பொறுத்து, காலநேரம் வேறுபடலாம். சிலருக்கு வருடக்கணக்கில் கூட ஆகலாம். ஆனால், அதற்காக மலைத்து நிற்றல் அறிவுடைமை ஆகாது. கடைசிவரை ஆங்கிலம் தெரியாமலேயே இருப்பதைவிட, வருடக் கணக்கில் முயற்சி செய்தாவது, அதைக் கற்றுக்கொள்வது 100 மடங்கு மேல் என்பதை உணருங்கள்.

    ஆங்கில மேம்பாட்டிற்கான சில எளிய ஆலோசனைகள்

    * ஒரு நாளைக்கு ஒரு வார்த்தைக் கற்றல்
    * உங்களின் குரலைப் பதிவுசெய்யல்
    * டிக்ஷனரி பயன்படுத்துதல்
    * சத்தமாகப் படித்தல்
    * கண்ணாடியின் முன் நின்றுகொண்டு பேசிப் பழகுதல்
    * தினந்தோறும் சர்வதேச ஆங்கில சேனல்களைப் பார்த்தல்
    * விளையாட்டுகளின் மூலம் ஆங்கிலம் கற்றல்
    * ஆங்கிலத்தில் சிந்தனை செய்தல்

    No comments: