அரசு பள்ளி கழிப்பறையை, மாணவர்கள் உதவியடன், சுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது, புகார் செய்ததால், மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வழங்குமாறும், தலைமை ஆசிரியை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெல்லை, சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை, அமலி அன்னாள், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள மனு: நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சத்துணவு பணியாளர் நாகராஜ், ஆசிரியை பழனியம்மாள். இவர்கள், ஆசிரியர்களின் கழிப்பறையை, சுத்தம் செய்ய, மாணவர்களைப் பயன்படுத்தினர்.
கூடுதல் உதவி துவக்கக் கல்வி அலுவலரிடமும், போலீசிலும் புகார் செய்தேன். இதை அடுத்து, சிலர், என்னை ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர்; தாக்குதல் நடத்தினர். மருத்துவ விடுப்பில் சென்றேன். ஏப்.,12 ம் தேதி, பணிக்கு வந்தேன்.
பொன்னுத்தாய் மற்றும் சிலர், பள்ளியில் நுழைந்து, மிரட்டல் விடுத்தனர்; பணி செய்ய விடாமல் தடுத்தனர். போலீசார், விசாரணை நடத்தினர். புகாரை வாபஸ் பெறுமாறு, பொன்னுத்தாய் மிரட்டினார். பள்ளியில் பணிபுரிய தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், என் புகாரை, வழக்காக பதிவு செய்யவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி, என்.கிருபாகரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. வழக்கில், போலீஸ் எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, வரும், 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

2 comments:
this is local politics
this is local politics
Post a Comment