"ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆன்-லைன் வழியில் நடக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள, 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பு ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும்.
இந்த பயிற்சியில் சேர, 4,430, மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், மாணவர், 429 பேர்; மாணவியர், 4,001 பேர். கலந்தாய்வில், 17,045 இடங்கள் உள்ளன. மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "ரேங்க்&' பட்டியல் தயாரிக்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுவர்.
மாணவர்களுக்கு, விரைவில், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். "ரேங்க்" பட்டியல் மற்றும் மாவட்டங்களில், கலந்தாய்வு நடக்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள், www.tnscert.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள், அதற்கான சான்றிதழ்களையும், கலந்தாய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கையை விட, நான்கு மடங்கு இடங்கள் அதிகமாக இருப்பதால், அனைத்து மாணவ, மாணவியருக்கும், இடம் உறுதி. எனினும், விண்ணப்பித்த மாணவர்களிலேயே, அதிக மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆவற்கும் வாய்ப்பு உள்ளது. 3,000 முதல் 3,500 இடங்கள் வரை பூர்த்தியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 8ம் தேதி - சிறப்பு பிரிவினர் / சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர் /ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர்
ஜூலை 9ம் தேதி - தொழிற்பிரிவு மாணவர்கள்
ஜூலை 10, 11ம் தேதி- கலைப்பிரிவு மாணவர்கள்
ஜூலை 12, 13, 15ம் தேதி - அறிவியல் பிரிவு மாணவர்கள்.

No comments:
Post a Comment