பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர். இவர்கள் அனைவரும், உடனடித்தேர்வில் பங்கேற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தும், 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனவே, கடந்த மாதம், 19ம் தேதி முதல், கடந்த, 1ம் தேதி வரை நடந்த உடனடித்தேர்வை, 50 ஆயிரம் முதல், 55 ஆயிரம் பேர் வரை எழுதியிருக்கலாம் என, கூறப்படுகிறது. வழக்கமாக, ஜூலை 20 - 25ம் தேதிகளுக்குள், தேர்வு முடிவு வெளியாகும். ஆனால், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் பணியே இன்னும் முடியவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, அதன்பின், டேட்டா சென்டரில், தேர்வு முடிவு தொகுக்கும் பணி நடக்க வேண்டும். இந்த அனைத்துப் பணிகளும் முடியவே, இந்த மாதம் ஓடிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment