Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 9, 2013

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்

    ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை.
    அதில், குடிமைப் பணிகளில் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்வது, தார்மிக மற்றும் நீதி சார்ந்த முடிவுகள் எடுப்பது குறித்த மாணவர்களின் செயல்திறனை நிர்ணயிப்பதுதான் இந்த தேர்வு முறை மாற்றத்தின் முக்கிய நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய முறை, 2013ம் ஆண்டு தேர்வில் இருந்தே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான அருண் எஸ். நிகாவேகர் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

    சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பழைய தேர்வு முறை:
    யு.பி.எஸ்.சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பழைய தேர்வு முறை எப்படி இருந்தது என்பதை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.

    சிவில் சர்வீஸின் முக்கியத் தேர்வில் General Studies பிரிவில் முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு 300 மதிப்பெண்கள், Optional I பிரிவில் முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு 300 மதிப்பெண்கள், Optional II பிரிவில் முதல் தாளுக்கு 300 மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு 300 மதிப்பெண்கள், Essay பிரிவில் 200 மதிப்பெண்கள் என மொத்தம் 2,000 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    Qualifying Papers பிரிவில் ஆங்கிலம் சார்ந்து 300 மதிப்ப்பெண்களுக்கும் பிராந்திய மொழி சார்ந்து 300 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு அல்லது ஆளுமைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

    யு.பி.எஸ்.சி செய்துள்ள புதிய மாற்றங்கள்:
    இந்த வருடம் முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் யு.பி.எஸ்.சி செய்துள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதை இப்போது விளக்கமாகப் பார்ப்போம்.

    முக்கியத் தேர்வில் முதல் தாளைப் பொருத்தவரை கட்டுரைக்கு 200 மதிப்பெண்கள், English Comprehension & English Precis-க்கு 100 மதிப்பெண்கள் என 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    இரண்டாம் தாளைப் பொருத்தவரை பொதுப் பாடத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம், சர்வதேச சமூகத்தின் வரலாறு மற்றும் நிலவியல் ஆகியவை குறித்து 250 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    மூன்றாம் தாளைப் பொருத்தவரை பொதுப்பாடத்தில் ஆட்சி, அரசமைப்பு, அரசியல், சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவற்றில் இருந்து 250 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    நான்காவது தாளைப் பொருத்தவரை பொதுப் பாடத்தில் தொழில்நுட்பம், பொருளாதார முன்னேற்றம், உயிர் பல்வகைத் தன்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை குறித்து 250 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    ஐந்தாவது தாளைப் பொருத்தவரை பொதுப் பாடத்தில் நெறிகள், ஒருமைப்பாடு மற்றும் நாட்டம் ஆகியவை குறித்து 250 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    விருப்பப் பாடங்களைப் பொருத்தவரை, முதல் தாளில் 250 மதிப்ப்பெண்களுக்கும், இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக, எழுத்துத் தேர்வின் மூலம் 1,800 மதிப்பெண்களுக்கும் ஆளுமைத் தேர்வின் மூலம் 275 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

    No comments: