Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 9, 2013

    தனியார் பள்ளிகள் தொடங்குவதற்கு நிபந்தனையின்றி அங்கீகாரம் வேண்டும்

    தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது.
    மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். ஜெயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் நந்தகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பழனியப்பன், கள்ளக்குறிச்சி சின்னதுரை, கண்டாச்சிபுரம் அந்தோனிராஜ், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி ரவி, சங்கராபுரம் அமுதாகார்த்திகேயன், செஞ்சி சையது ரிஷ்வான் நர்சரி பள்ளி வியுலாசெல்வராஜ், ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகி வீரதாஸ், கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி பள்ளி வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
    அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஓரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு எவ்வித நிபந்தனையின்றி அங்கீகாரம் வழங்க வேண்டும்.
    பள்ளி அமைவிடம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு விலக்களிக்க வேண்டும். பள்ளி வாகன விபத்துகளுக்கு பள்ளியின் நிர்வாகியை கைது செய்வதை கண்டிக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை தளர்த்தி பழைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில் மாணவர்களை அரசே தேர்வு செய்து கல்வி கட்டணத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தால்தான் சிக்கல் தீர்வு காண முடியும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி தரக்கோரி சென்னையில் வரும் 11ம் தேதி பள்ளி கல்வி இயக்குனரை சந்தித்து மனு அளிக்க அனைவரும் திரளாக கலந்துகொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ஆலம்பூண்டி ராஜாதேசிங்கு நர்சரி பள்ளி வெங்கடேசன் நன்றி கூறினார்.

    1 comment:

    Anonymous said...

    Govt:Unga istam pola seirom. Vera enna seiyanum ajaman.