Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 8, 2013

    36 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 36 மையங்களை தயார் நிலையில் வைக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மார்ச் 1ல், துவங்கிய பிளஸ் 2 தேர்வு, மார்ச், 27 ல், முடிகிறது. விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்களுக்கு, அனைத்து விடைத்தாள்களும் வந்து சேர்ந்த பின், திருத்தும் பணி துவங்கும் தேதியை, தேர்வுத் துறை இயக்குனரகத்தால் அறிவிக்கப்படும்.

    அதற்கு முன், விடைத்தாள் திருத்தம் செய்யும் மையங்களில், தடையில்லா மின்சாரம், குடி நீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அனைத்தும், தயார் நிலையில் வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில், சென்னையில் மூன்று , மதுரை, திருச்சி, கோவையில் தலா இரண்டு, மற்ற மாவட்டங்களில் தலா ஒரு மையம் என, 36 மையங்களில், தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படுகின்றன. மையங்களில், அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments: