பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், மாணவ - மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைப்பதற்காக, கூட்டு வழிபாடு, சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், வரும், 19ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, ஐந்தாம் ஆண்டாக, இந்த சிறப்பு வழிபாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்க, அனுமதி இலவசம்.
தேர்வுக்குரிய எழுது பொருட்கள், பூஜையில் வைத்து வழிபாடு செய்து, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இதில், பங்கேற்க விருப்பம் உள்ளோர், 12ம் தேதி, கோவிலில் வழங்கப்படும், அனுமதி கூப்பனை பெற வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 044 - 24712173 என்ற தொலைபேசி எண்ணிலும், 9944309719 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment