செய்முறை தேர்வு வினாத்தாள், சி.இ.ஓ., அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 செய்முறை தேர்வு, பிப்.,8 தொடங்கி, 22 வரை, இரு பிரிவாக, காலை மற்றும் மாலையில் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிகளுக்கான, செய்முறை தேர்வு வினாத்தாள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கு, நேற்று வழங்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட கவரை, செய்முறை தேர்வு தினத்தன்று மட்டுமே, கல்வி துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், அனைத்து பள்ளிகளும், வினாத்தாளை வாங்கி சென்றன. வினாத்தாள் பேட்ச் மட்டுமின்றி ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் மாறும்.
எனவே, யாருக்கு எந்த வினாத்தாள் வரும் என்பது தெரியாது. செய்முறை தேர்வு வினாத்தாளுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே பொறுப்பாவர்.
முறைகேடு நடந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மைய அனுமதியை ரத்து செய்யப்படும் என்று, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment