Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 10, 2017

    சி.இ.ஓ., வேண்டாம்; பி.ஏ.,க்கள் போதும்!

    சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. 


    இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் ’பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,’ என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. 

    இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய ’ஈகோ’ யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. 

    இதுதொடர்பான கூட்டம் சென்னையில் இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.

    இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது,‘ என்றார்.

    No comments: