அரசு பள்ளிகள் செயல்பாட்டிற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் ’மதிப்பெண்’ அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை, சிறப்பு தகுதிகள் குறித்து தரம் பிரித்து இத்திட்டத்தின் கீழ் மதிப்பெண் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 198 அரசு, 84 உதவி பெறும் பள்ளிகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு வருகின்றன. அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகளுக்கு ’தன்னிறைவு பெற்றது’ என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.
மதிப்பெண் தெரிய வேண்டிய பள்ளிகள் இத்திட்டத்தின் tnrmsasrs.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பள்ளிக்கான ’யுனிக்’ எண்ணை குறிப்பிட வேண்டும். அதில் இடம் பெற்ற வினாக்களுக்கு விடையளித்தால் இறுதியில் பள்ளிக்கான மதிப்பெண் வழங்கப்படும்.
இதுகுறித்து உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா கூறுகையில், ‘திட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து மதிப்பெண் பெற வேண்டும். அவற்றின் விபரம் ஒவ்வொரு பள்ளியிலும் மக்கள் பார்வைக்காக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் மதிப்பெண் விபரத்தை அறிவிப்பு பலகையில் இம்மாதத்திற்குள் இடம்பெற வைக்க வேண்டும்,‘ என்றார்.
No comments:
Post a Comment