அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் பள்ளி குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் வகையில், பலவித பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைதிட்ட பயிற்சி, நேற்று துவங்கியது. தலைவாசல் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைவாசல் வட்டார வள மையத்தில், மேற்பார்வையாளர் சரவணன் பயிற்சியை துவக்கிவைத்தார். இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக, சிறப்பு தேவையுடைய குழந்தைகளையும், அவர்களது திறமையையும் எப்படி வெளிக்கொண்டு வருவது, கற்றலில் அவர்களை மேம்படுத்துவது, தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவித்தல், அனைவரும் சமம் என்பதை புரிய வைத்தல் என, பல்வேறு விதமான பயிற்சிகள் நடந்தது.
இதில், தலைவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள அரசு பள்ளிகளிலிருந்து, 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென தயாரிக்கப்பட்ட, சிறப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment