அரசு மருத்துவக் கல்லுாரிகள் பெரும்பாலானவற்றில் ரேடியோலஜி முதுநிலை படிப்பு இல்லாததால், டிப்ளமோ முடித்த டாக்டர்கள், பதவிஉயர்வு இல்லாமலேயே பணிஓய்வு பெறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மூன்றில் மட்டுமே ரேடியாலஜி முதுநிலை பாடத்திட்டம் உள்ளது. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் ரேடியாலஜி நிபுணரின் பங்கு முக்கியம். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் இல்லாமல் சிகிச்சை அளிப்பது இயலாத விஷயம்.வயிற்றுவலி, பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கண்டறிவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமே சாத்தியம். ரேடியாலஜி பிரிவில் முதுநிலை பட்டம் முடித்தவர்கள் தான், கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்; பதவிஉயர்வும் பெறமுடியும். டிப்ளமோ பாடம் நடத்துவதற்கு கூட எம்.டி., முடித்தவர்கள் தான் தேவை.
மருத்துவக் கல்லுாரி ஆரம்பித்தால் முதுநிலையில் பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, மயக்கவியல், ரேடியாலஜி பிரிவுகள் அவசியம் தேவை. ரேடியாலஜியில் இரண்டாண்டு டிப்ளமோ படிப்புகள் தான் நிறைய கல்லுாரிகளில்உள்ளன. இப்படிப்பை முடித்தாலும் ஆசிரியராக முடியாது; பணிஓய்வு வரை பதவி உயர்வு பெறமுடியாது.
பழமைவாய்ந்த மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் கூட முதுநிலை ரேடியாலஜி படிப்பு இல்லை. ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட எட்டு அரசு மருத்துவக் கல்லுாரிகளிலாவது முதுநிலை படிப்பை கொண்டு வந்தால் தான், கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். அரசு இப்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment