திண்டுக்கல் புத்தகத்திருவிழாவில் கடந்த 10 நாட்களாக மழை விட்டு, விட்டு மழை பெய்த போதும், ரூ.6 கோடிக்கு புத்தகங்கள் விற்றுள்ளன.
இப்புத்தகத்திருவிழாவில் 77 பதிப்பகங்கள் பங்கேற்றன. 117 புத்தகக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாணவர்கள் மட்டும் ரூ.6 லட்சம் அளவிற்கு புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
அதிகம் விற்பனையான புத்தகங்கள்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் துவங்கி, ரா.நடராஜனின் ஆயிஷா, சமச்சீர்திட்டக் கல்விக்கான குறுந்தகடுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு தேவையான பி.பி.சி., டிஸ்கவரி, நேச்சுரல் ஜியோகிராபி, ஜோஸ்பின் மர்பியின் பவர் ஆப் யுவர் சப் கான்சியஸ் மைன்ட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனையாகின.
பதிப்பக நிர்வாகிகள் கூறியதாவது: மழையால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. மாணவர்களிடம் புத்தகம் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment