Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 7, 2015

    படித்ததை உடனுக்குடன் எழுதிப் பார்த்தால் சென்டம் நிச்சயம்

    தினமலர் கல்வி மலர் சார்பில், டி.வி.ஆர்., அகாடமியின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, குன்னுார் புனித அந்தோணியார் பங்கு மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக, மாணவ, மாணவியருக்கு டிப்ஸ் வழங்கினர். 


    தமிழ் பாடத்தை பொறுத்தவரை, அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். கோடிட்ட இடத்தின் வினாவை, ஒரு முறைக்கு இரு முறை படிக்கவும். மேற்கோள் பகுதிகளை தெளிவாக எழுத வேண்டும். மனப்பாட பகுதி எழுதும்போது, கட்டாயம் தலைப்பு இருக்க வேண்டும். 

    நெடு வினா குறிப்பு அவசியம் எழுத வேண்டும். இண்டாம் தாள் என்பது நம்முடைய சொந்த படைப்புகள் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த பாடங்களை தெளிவாக படித்து எழுத வேண்டும். மொழித்திறன், மரபுத் தொடர் வாக்கியங்கள், அணி இலக்கணம் ஆகியவைகளை சரியாக எழுதுவதுடன், துணைப்பாடத்திற்கு உண்டான கதையை முழுமையாக படித்து, தலைப்பு போட வேண்டும். கட்டுரைகளை ஒன்றரை பக்க அளவில், தெளிவாக எழுதினால் தமிழ் பாடத்திலும் சென்டம் பெற முடியும். 

    ஆங்கிலம் பாடத்தில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் உள்ள பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை அன்றைய தினமே, ஆசிரியர்களிடம் தெளிவு படுத்திக்கொள்வது முக்கியம்.

    தேர்வில், கேள்விகளை ஒரு முறைக்கு இரு முறை படித்துப் பார்த்து, எழுத ஆரம்பிக்க வேண்டும். தெரியாத வினாக்களை முதலில் எழுதி, நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். முக்கிய வினாக்களுக்கு தலைப்பு போட்டு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதினால் ஆங்கிலத்தில் சென்டம் எளிதில் வாங்கலாம். 

    கணிதப் பாடத்தை முதலில் புரிந்து படிக்க வேண்டும். கேட்கப்பட்ட கேள்வியை மனதில் புரிந்து, தவறு இல்லாமல் கணக்குகளை போட வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவது கணிதப்பாடம் தான்; அதே சமயத்தில் மதிப்பெண் குறைவதும் கணித பாடத்தில்தான்.

    அப்படி இருக்கும் போது, தவறு இருந்தால் உடனடியாக திருத்தி கொள்வது அவசியம். கிராப், டயகிராம் போன்றவற்றை மனதில் புரிந்து தெளிவாக எழுதப் பழகிக்கொள்ள வேண்டும். வகுப்பறையில் நடக்கும் பாடங்கள் குறித்த நண்பர்களுடனும் கலந்துரையாடுவதுடன், சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். எழுதிய பதில்கள் அனைத்து சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை, புரட்டிப் பார்த்தால், 100 சதவீதத்தை எளிதில் எட்டலாம். 

    அறிவியல் பாடத்தில் பகுதி 2ல், பாடங்களை மட்டும் படித்தால் போதாது. படித்ததை தேர்வில் எப்படி பிரசன்ட் செய்கிறோம் என்பது தான் முக்கியம். குறைந்தது மூன்று மாதம் இடைவேளையில், அனைத்து பாடங்களையும் படித்து முடித்துவிட வேண்டும். முக்கிய வினாக்களுக்கு படிப்படியாக சரியாக எழுதுவதுடன், அதில் உள்ள பாயின்ட்ஸ்களை குறிப்பிட்டால் அதிக மதிப்பெண் பெறலாம். அறிவியல் பாடத்தை பொறுத்தவரை, சந்தேகம் இருந்தால், நாளை பார்க்கலாம் என்று தள்ளிப்போடாமல், அன்றைய தினமே ஆசிரியர்களை சந்தித்து நிவர்த்தி செய்தால் எளிமையாக சென்டம் பெறலாம். 

    சமூக அறிவியல் பாடத்தை எளிதாக நினைக்காமல், திட்டமிட்டு படிக்க வேண்டும். ஒரு பத்தி வினாக்களுக்கு துணைத் தலைப்பு இருக்க வேண்டும். குறு வினாக்களுக்கு தலைப்பிட்டு, பாயின்ட்ஸ்களை சரியாக குறிப்பிடுவது அவசியம். புவியியல் பாடத்தில் வினாக்களுக்கான உதாரணம் கொடுத்து எழுத வேண்டும். 

    முக்கிய வினாக்களில் ஆண்டு, பெயர்கள், இடத்தை சரியாக குறிப்பிடுவது அவசியம். தேர்வு அறையில், கேள்விகளை ஒரு முறை தெளிவாக படித்து, தெரிந்த வினாக்களுக்கு நேரத்தை வீணாக்காமல் எழுதினால், சமூக அறிவியல் பாடத்தில் எளிதில் சென்டம் பெறலாம். 

    அறிவியல் பாடத்தில் பகுதி வாரியாக பாடங்களை திட்டமிட்டு கவனமுடன் படித்தால், 75 மதிப்பெண்களுக்கான தேர்வில், முழுமையான மதிப்பெண் பெற்று விடலாம். செய்முறை தேர்வை புரிந்து செய்தால், 25 மதிப்பெண், அப்படியே கிடைத்து விடும்.

    தேர்வு அறையில் கேட்கப்பட்ட கேள்விகளை குறைந்தது, 10 நிமிடம் படிக்க வேண்டும். வினாக்களை வரி வரியாக தெளிவாக எழுதுவதுடன், தலைப்புகள் போட்டு, அதற்கான பாயின்ட்ஸ்களை குறிப்பிடுவது அவசியம்.  

    பகுதி வாரியாக வினாக்களுக்கான விடைகளை எழுதும் போது, நேரத்தை வீணாக்காமல் எழுத வேண்டும். எழுதி பின் ஒரு முறை பார்த்து தவறு இருந்தால் திருத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

    No comments: