தன் பெற்றோர் தகுதி குறைந்தவர்கள்; தான் ஒரு ஏழ்மையானவன்; நண்பர்கள் மதிப்பதில்லை; உடை பொருத்தமானதாக இல்லை; உறவினர்கள் யார் இருக்கிறார்கள்? தன்னுடைய நிறம் கவர்ச்சியில்லை; பேச்சு தெளிவாக இல்லை; தனக்கு அறிவு குறைவுதான்; வாய்ப்புகளே கிடைப்பதில்லை; எந்த தொழிலிலும் தோல்வி.
இப்படிப் பட்ட எண்ணத்துடன் பொழுதை போக்குபவர்களால் எதையும் சாதிக்க முடியாது. இதற்கு காரணம் அவர்களது மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தான். கம்ப்யூட்டர் எப்படி அதில் உள்ள புரோகிராம்களுக்கு ஏற்றவாறு செயல்படுகிறதோ அதைப்போல, தங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்.
No comments:
Post a Comment