சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment