Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 1, 2015

    கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவு எவ்வளவு?

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15-ஆம் கல்வியாண்டில் ஒரு மாணவருக்கான செலவுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.32,263 செலவாகிறது. இதில் அரசு மானியமாக ரூ.25,898 வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் உள்ளன. இதில் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்காக மத்திய அரசு ரூ.3,047 கோடியை மானியமாக கடந்த ஆண்டு வழங்கியது. அதோடு, பள்ளிகளின் இதர செலவுகளுக்காக ரூ.749 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
    2013-14 நிதியாண்டில் ஒரு மாணவருக்கு ரூ.29,857 செலவிடப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இந்தத் தொகை ரூ.32,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மாநில அரசு பள்ளிகளைப் பொருத்தவரை, ஒரு மாணவருக்கு தோராயமாக ரூ.6,500 வரை அரசு செலவிடுகிறது.

    No comments: