ராஜஸ்தானில், பச்சிளம் பருவத்தில் தாயை இழந்த மகளை, பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பாமல், தன் சொந்த முயற்சியில் பாடம் கற்பித்து, எம்.ஏ., பட்டம் பெறச் செய்த தந்தையின் செயல், அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இங்குள்ள, சன்வர் சங்கமானந்த், பள்ளி மாணவர்களுக்கு, டியூசன் எடுக்கிறார். இவரின் மகள், கிரண் ஜரிவால், ஆறு மாத குழந்தையாக இருந்த போதே, தன் தாயை இழந்தார். மகளை பள்ளிக்கு அனுப்பினால், தாயில்லாத குறையை அறிந்து மிகவும் வேதனைப்படுவாளோ என எண்ணிய அவர், கிரணை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே பாடம்கற்பித்தார்.
கிரண், தனித் தேர்வராக, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்து வீட்டில் இருந்தபடியே பட்டம் பெற்ற இவர், ராஜஸ்தானி மொழியில், எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல், ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை வெற்றிக் கொடி நாட்டிய கிரணின் சாதனை, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment