பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் 56,113 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,686-ஆகக் குறைந்துள்ளது.
வீடுவாரியாகக் கணக்கெடுப்பு, விழிப்புணர்வு முகாம், தரமானகல்வி போன்றவற்றின் மூலம் 100 சதவீத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மென்பொருள் மூலம்... பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் அவரவர் வயதுக்கும், கற்றல் அடைவுத் திறனுக்கும் ஏற்ப மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
அவ்வாறு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
புகைப்படத்துடன்கூடிய மாணவர் விவரம், மாணவரின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனரா, மாணவர் பள்ளிக்கு எத்தனை நாள்கள் வரவில்லை உள்ளிட்ட விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
அந்த மாணவர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பெறுவது வரை அவரது கற்றல் விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 42,245 பேர் சிறப்புப் பயிற்சி மையம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகள், நேரடிச் சேர்க்கை ஆகிய வழிகளில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.
1 comment:
வி.ஏ.ஓ ( VAO) தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் முழுமையாக பெற ஸ்ரிராம் கோச்சிங் சென்டரின் வி.ஏ.ஓ கைடு..
பாடத்திட்டம் பின்வருமாறு:
1. கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
2. அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
3. நிலஅளவை, நிலவரித்திட்டம்,
4. நிலவரிவசூல்
வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
5.நிலச் சீர்திருத்தம்
குடிவாராச் சட்டங்கள்
6. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
7. நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை.
8. புதையல்.
9. கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்.
10. விபத்து நிவாரணத் திட்டம்.
11. சாவடிகளைப் பராமரித்தல்.
12. நிலமாற்றம்
நிலஎடுப்பு
13. பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
14.பேரிடர் மேலாண்மை,
15. நிவாரணப் பணிகள்,
16.அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
இருப்புப் பாதைகள்
17. கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
18. பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
19.ஓய்வூதியத் திட்டங்கள்
20.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
21. விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது
22.சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
23.வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
24.கால்நடைப்பட்டி
25. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
இந்த புக்கின் கூரியர் விலை உட்பட 400ரூபாய் மட்டும்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே
தொடர்புக்கு
நிறுவனர் 86789 13626 ..
Post a Comment