தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,300 பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பில் கிராம நிர்வாக அதிகாரி(VAO) - 800, நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் -2 ஏ பணியிடங்கள் - 1,700, குரூப் - 4 பணியிடங்கள் - 2,800 என, 5,300 காலியிடங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இதற்கான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 118 பணி
வேலூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது வரம்புக்கு உட்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 - 9, இளநிலை உதவியாளர் - 8, தட்டச்சர் - 13, நகல் பரிசோதகர்/படிப்பவர் - 1,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 18, ஓட்டுநர் - 2, நகல் எடுப்பவர் - 2, அலுவலக உதவியாளர் - 20, இரவு காவலர் - 20 மற்றும் முழுநேர பணியாளர்/மசால்ஜி - 25 உள்ளிட்ட மொத்தம் 118 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான அறிய http://ecourts.gov.in/sites/default/files/Court_Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணி
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1101 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணி: கால்நடை ஆய்வாளர் நிலை -2 (பயிற்சி)
காலியிடங்கள்: 294
2. பணி: கதரியக்கர் (Radiographer)
காலியிடங்கள்: 24
3. பணி: ஆயாவக உதவியாளர்
காலியிடங்கள்: 17
4. பணி: ஆய்வுக் கூட தொழில்நுட்பாளர்
காலியிடங்கள்: 02
5. பணி: மின்னாளர் (Electrician)
காலியிடங்கள்: 03
6. பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 36
7. பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 725
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2015
வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 83 தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 30
பணி: Typist (தட்டச்சர்)
காலியிடங்கள்: 30
பணி: Electrician Grade -II
காலியிடங்கள்: 06
பணி: Wireman Grde-II
பணி: Bolierman, Grade - II
பணி: Plumber
பணி: Assistant Draughtsman (Civil)
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2015
மேலும் வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
சென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு 67 பணி
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான 67 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rrcmas.in/downloads/rrc-sports-quota/rrc-sport-quota-notification-open-ads.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆர்ஆர்பியில் 651 கிளார்க், தட்டச்சர் பணி
இந்திய ரயில்வே துறையின் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண். 02/2015
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 301
பணி: அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர்
காலியிடங்கள்: 55
பணி: டிரெய்ன்ஸ் கிளார்க்
காலியிடங்கள்: 29
பணி: கமர்ஷியல் கிளார்க்
காலியிடங்கள்: 86
பணி: டிக்கெட் பரிசோதகர்
காலியிடங்கள்: 180
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விரங்கள் அறிய http://www.rrbahmedabad.gov.in/images/CEN_022015_NTPC_UG_SRD_PWD_Eng.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
இராணுவ பொது பள்ளிகள் 7000 பணி
இந்தியா முழுவதும் நிர்வகிக்கப்பட்டு வரும் இராணுவ பொது பள்ளியில் நிரப்பப்பட உள்ள 7000 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015
விண்ணப்பக்கட்டணம், தேர்வு முறைகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines_for_candidates.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பணி
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் (Kanyakumari DCMPU Ltd) நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (P & J)
பணி: Deputy Manager (Dairying)
பணி: Deputy Manager (Dairy Chemist)
பணி: Extension Officer Grade - II
பணி: Executive (System)
பணி: Junior Executive (Office)
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சல் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு காகித ஆலையில் 50 ஆப்ரேட்டர் பணி
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித ஆலையில் ஆப்ரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator for Production (Semi Skilled (B))
பணி: Operator for Production (Semi Skilled -(A))
பணி: Operator for Production (Skilled -(B))
சம்பளம்: மாதம் ரூ.7,920 - 10,605
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2015
மேலும் வயதுவரம்பு, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய பங்கு மற்றும் வணிக பரிவர்த்தனை ஆணையத்தில் 46 உதவி மேலாளர் பணி
இந்திய அரசுக்கு சொந்தமான இந்திய பங்கு மற்றும் வணிக பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தில் (SEBI) நிரப்பப்பட உள்ள 46 Assistant Manager (Grade-A) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Grade-A)
1. General - 31
2. Legal - 09
3. Engineering (Civil) - 01
4. Official Language - 02
5. Research - 02
மேலும் சம்பளம், வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை,விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sebi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் மத்திய, மாநில, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகள் அனைத்தும் தினமணி இணையதளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன. படித்தும் விண்ணப்பித்து பலன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment