நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் வாசிப்புத் திறனை சிறப்பாக்க, இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, அதற்கான முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன.
READ (Read-Engage-Achieve-Dream) என்ற பெயரில் அந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதே மேம்பாட்டிற்கான அமெரிக்க ஏஜென்சி மற்றும் இந்தியாவின் அறிவுப் படிப்புகளுக்கான மையம் ஆகியவை இணைந்து இந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு குழந்தை வாசிப்பதற்கு கற்கத் தொடங்கும் தருணம்தான், அது தனது வாழ்க்கையில் முக்கியமாக தேவைப்படும் ஒரு திறனை அக்குழந்தை பெற்றுக்கொள்ளும் தருணம். எனவே, இந்த முன்முயற்சியின் மூலம் இந்திய குழந்தைகள் மிகுந்த நன்மைகளைப் பெறுவார்கள் என்று நம்புவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
READ துவக்க விழாவில், "வாசிப்பதற்கான 7 வழிகள்" என்ற கருத்துச் சுருக்கம் வெளியிடப்பட்டது. இந்திய குழந்தைகள், தங்களின் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு திட்டத்தை இந்த கருத்துச் சுருக்கம் வழங்குகிறது.
No comments:
Post a Comment