தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்ததால், ஆசிரியர்கள் சங்கம் விட்டு சங்கம் தாவினர். இதையடுத்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியில், 100 ஆசிரியர்கள் புதிதாக இணைந்தனர். பள்ளிப்பட்டு வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில், தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த விவகாரத்தில், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இதில், உடன்பாடு ஏற்படாததால், அதிருப்தியில் இருந்த ஆசிரியர்கள், நேற்று முன்தினம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இணைந்தனர். இதற்கான விழா பொதட்டூர்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது. இதில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் முன்னிலையில், 100 ஆசிரியர்கள் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை, வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment