மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இது குறித்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்ட அறிவிப்பு:
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு (டங்ய்ள்ண்ர்ய் டஹஹ்ம்ங்ய்ற் ஞழ்க்ங்ழ்-அசல் மற்றும் நகல்), வங்கி கணக்குப் புத்தகம், வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு-நகல்) ஆகியவற்றை ஓய்வூதிய அலுவலகத்துக்கு வரும் போது எடுத்து வர வேண்டும்.
மேலும், ஓய்வூதியத்தை கூட்டு கணக்கு (ஒர்ண்ய்ற் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) மூலம் பெறுபவர்கள், தங்களது துணையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
நேரில் வரத் தேவையில்லை: ஆவணங்களைச் சமர்ப்பிக்க நேரில் வர இயலாதவர்கள், வங்கிக் கிளை மேலாளர், மாநில - மத்திய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி, வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பிறநபர் மூலமாகவும் சேர்க்கலாம்.
அவ்வாறு அனுப்பும் போது, ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்வுச் சான்றுடன் வங்கிக் கணக்கு எண், ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு, பான்கார்டு (நகல்கள் மட்டும்) ஆகியனவும் முக்கியமாகும்.
வெளிநாட்டில் இருக்கும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றினை அந்த நாட்டில் உள்ள நீதிபதி, நோட்டரி, வங்கிக் கிளை மேலாளர், இந்திய நாட்டுப் பிரதிநிதி ஆகியவற்றில் ஒருவருடைய கையெழுத்தினைப் பெற்று குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட்டில் நிறுத்தப்படும்: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அளிக்க வேண்டிய வாழ்வுச் சான்று மற்றும் மறுமணம் புரியாத சான்று ஆகியவற்றின் படிவங்கள் ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ந்ஹழ்ன்ஸ்ர்ர்ப்ஹம் என்ற இணையதளத்தில் உள்ளன.
ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேரிலோ அல்லது தபால் உள்பட உரிய முறையிலோ சான்றுகளை அனுப்பத் தவறினால் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும்.
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் முழு முகவரி: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6
No comments:
Post a Comment