தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஆணையில் ஒரு ‘யூனிக்’ எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட அலுவலரின் பெயர், பணிபுரியும் இடம், செல்போன் எண், குடும்ப விவரம் உள்ளிட்ட முழு தகவல்களும் தெரியவரும். இந்த தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்னையில் இன்று 16 இடங்களில் நடந்தது. அண்ணாநகர் தொகுதிக்கான பயிற்சி முகாம் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் நடந்தது. இங்கு 1000 அலுவலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 45 பேர் வீதம் அமர வைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடர்பாக சி.டி. மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர், கலெக்டர் சுந்தர வள்ளி, அருள்சந்தர் தயாள், இளங்கோவன், ஜெகந்நாதன் உள்பட அதிகாரிகள் பயிற்சி முகாமை பார்வையிட்டனர். பயிற்சி நடைபெற்ற இடத்தில் மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அலுவலர்கள் இந்த மாதிரி வாக்குசாவடிகளில் பணிபுரிவது பற்றி நேரடியாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பணி ஆணையில் புகைப்பட குளறுபடி ஏற்பட்டால் இதை உடனடியாக நிவர்த்தி செய்ய புகைப்பட மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் அலுவலர்கள் ஒவ்வொருவரிடமும் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு தனியாக விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து பெற்றுக் கொண்ட னர்.
No comments:
Post a Comment