தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய, எஸ்.எம்.எஸ்., திட்டம் மூலம், ஒரு லட்சம் வாக்காளர்கள், தாங்கள் ஓட்டு போடும், ஓட்டுச்சாவடி விவரங்களை அறிந்து கொண்டனர்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 13 லட்சம் பேர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 10 லட்சம் பேர், 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. துணை வாக்காளர் பட்டியல், ஏப்., 5ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும். தாங்கள் ஓட்டு போடும் ஓட்டுச்சாவடி விவரங்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்ற விவரத்தையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதியை, 10 நாட்களுக்கு முன், தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது. இதற்கு, மொபைல் போனில், "epic' என, "டைப்' செய்து, இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தால், இரண்டு நிமிடங்களில், தகவல் வந்துவிடும்.இவ்வசதியை பயன்படுத்தி, இதுவரை ஒரு லட்சம் பேர், ஓட்டுச்சாவடி விவரத்தை அறிந்துள்ளனர். அதேபோல், தலைமைச் செயலகத்தில் உள்ள, தேர்தல் பிரிவு அலுவலகத்தில், கட்டணமில்லா டெலிபோன் எண், "1950' உள்ளது. இம்மாதம், 3ம் தேதியில் இருந்து, 34,481 புகார்கள் வந்துள்ளன. கடந்த, 27ம் தேதி மட்டும், 1,358 பேர் பேசியுள்ளனர். பெரும்பாலானோர், வாக்காளர் பட்டியல் குறித்து சந்தேகம் கேட்டனர். தேர்தல் விதி மீறல் தொடர்பாக, 80 புகார் வரப்பெற்றுள்ளது. கடந்த இரு தினங்களாக, வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, ஏராளமானோர் விசாரித்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment