தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது.
இதற்கான கொள்கைகள், சட்டத்திட்டங்கள், வரையரைகள், விதிமுறைகள் ஆகியவைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. சிதம்பரத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற ஏப்.20-ம் தேதி சென்னையில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து மாநில அளவில் கூட்டத்தை கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளனர் என அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்சியுமான சி .ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.
1 comment:
Welcome,nice thought but late,by the time ,we should have fed the candidates.Congrats,best of luck from all teachers .
Post a Comment