வானம் எப்பொழுதும் உயர்ந்ததாகவும், அதிசயங்கள் நிறைந்ததாகவும் காலம் காலமாக நம் மனதில் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் அந்த வான்வெளியின் மேல் பற்று கொண்டு அதனை ஆராய்ந்து விடைகளைக் கண்டுணர்ந்தவர்கள் ஒரு சிலரே.
மேலும் அவர்களுக்கான அங்கீகாரம் எளிதாக கிடைத்துவிடவில்லை. கடும் எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களின் ஆராய்ச்சிகளை உலகுக்கு வெளிப்படுத்தினர்.
இன்றைக்கு பல்வேறு வகையான தொழில்நுட்ப வசதிகள், வாய்ப்புகள் வந்த பிறகும் வான்வெளியை உணர்ந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகள் அனைத்தும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. வான்வெளிப் போக்குவரத்திற்கான தேவைப்பாடுகளும் அதிகரித்தவாறே இருக்கிறது. வான்வெளியை நோக்கிய புதிய புதிய ஆராய்ச்சிகளுக்கு ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் பெரிய அளவில் நிதி ஒதுக்கி ஆராய்ச்சி நிலையங்களை அமைத்து வருகின்றன.
வான்வெளியின் பங்கு கடந்த காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் என்பதால் ஆர்வத்துடன் வருபவர்களுக்கு வெற்றிகள் காத்திருக்கிறது.
எதிர்காலத்தில் வான்வெளித் துறை
உலக அளவில் 2020க்குள்ளாக வான்வெளி போக்குவரத்துத் துறையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல விமான நிலையங்கள் உருவாக்குவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், இருக்கும் விமான நிலையங்களையும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மற்றும் போக்குவரத்துத் துறையிலும் இந்தியர்களுக்கு வளமான வாய்ப்புகள் உள்ளன.
தேவையான திறன்கள்
பொறுமை, ஆராயும் குணம், அதிக கவனம், கணிதத்தின் மேல் ஆர்வம், புரிந்து கொள்ளக்கூடிய திறன், புதியவற்றைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் போன்றவை அடிப்படையாகத் தேவைப்படக்கூடிய திறன்களாகும்.
பணி வாய்ப்புகள்
இந்திய விமானப்படை, இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம், டி.ஆர்.டி.ஓ., நேஷனல் ஏரோநாட்டிக்கல் லேபரட்டரி, அமெரிக்காவின் நாசா அமைப்பு, விமானப்போக்குவரத்துத்துறை போன்றவற்றில் பணியாற்றலாம்.
சம்பளம்
ஆரம்ப காலக்கட்டங்களிலேயே 30,000 ரூபாய்கும் மேல் பெறலாம். சில வருட பணி அனுபவத்திற்குப் பிறகு 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சில
இந்திய அறிவியல் கல்விக்கழகம், பெங்களூர்
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
ஜெயின் பல்கலைக்கழகம்,
இந்திய வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருவனந்தபுரம்.
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment