தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் 2,413 பேர் காணாமல் போய் உள்ளனர். அந்த வரிசையில், நடப்பு ஆண்டில் மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என காவல்துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 202 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவியர். குடும்ப பிரச்னைகளால், ஏழு பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
மதுரை, 46, வேலூர், 37, காஞ்சிபுரம், 35, சேலம், 28, தேனி, 26, தஞ்சை, 22, நெல்லை, 21, விழுப்பும், 18, விருதுநகர், 17, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், போட்டோக்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
1 comment:
athu sari.... emis vathathil irunthu pala pallikalil maanava maanavikalaik kaanoom.ithai kantippaaka cbcid pottaavathu visarikka ventum
Post a Comment