தஞ்சை தமிழ் பல்கலையின், தொலைநிலை தேர்வுகள், மே மாதம், 21 முதல், 30 வரை நடக்கின்றன. தேர்வர்கள், பல்கலையின் இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். தஞ்சை தமிழ் பல்கலை, தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு மற்றும் அடிப்படை கல்வித்தேர்வு, மே மாதம், 21
முதல், 30 வரை, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள, 37 மையங்களில் நடக்கிறது. அதற்கான விண்ணப் பங்கள் மற்றும் விவரங்களை, www.tamiluniversity.ac.in , www.tamiluniversitydde.org ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த மாதம் இறுதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்காதவர்கள், மே மாதம், 5க்குள், 100 ரூபாய் தாமதக் கட்டணத்துடன், விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேதியிலும் விண்ணப்பிக்காதவர்கள், 500 ரூபாய் அபராதத்துடன், மே, 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment