வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்களிலும் வரும் 3ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.
அதன்படி அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த நலத்திட்டங்களும் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், மது அளித்தல் போன்ற பல்வேறு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணி நேரமும் கண்காணிக்க 13 சட்டமன்ற தொகுதிகளில் 39 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சோதனை சாவடிகளில் கண்காணிக்க 39 நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க 13 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் மண்டல அளவில் தேர்தல் பயிற்சி பெற்ற 530 அலுவலர்கள், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வரும் 3ம் தேதி அந்தந்த தாலுகா அலுவலங்களில் அளிக்கப்படுகிறது. இதில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது, வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்தும், வாக்காளர்களுக்கு மை வைப்பது, வாக்களர்களுக்கு பூத் சிலிப்பு வழங்குதல், போன்ற பயிற்சிகள் குறித்து செயல்விளக்கம் மூலம் விளக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment