"பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்" என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. 7.31 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். குளறுபடிகள் இன்றி, தேர்வை நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தேர்வு நாட்களில், அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர், அறை கண்காணிப்பாளராகவோ அல்லது பறக்கும் படை உறுப்பினர்களாகவோ இருக்க கூடாது. உதாரணமாக, தமிழ் தேர்வு நாளில், தமிழாசிரியர், எப்பொறுப்பிலும் பணியமர்த்தக் கூடாது.
அத்தகைய ஆசிரியர்களுக்கு, அன்றைய தினம், விடுப்பு கொடுத்து விட வேண்டும். ஆனால், முதன்மை கண்காணிப்பாளராக இருக்கும், தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு, கடந்த, 25ல் நிறைவடைந்துள்ளது.
No comments:
Post a Comment