நாமக்கல்: பிளஸ் 2 வணிகவியல் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால், இந்தப் பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதுடன், சதம் வாங்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் உயரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் நடக்கிறது. தேர்வில் எவ்வித குளறுபடிகளும் நடக்கக் கூடாது என்பதற்காக, தேர்வுத்துறை இயக்குனரகம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து தேர்வை நடத்தி வருகிறது.
அதேபோல் வினாத்தாள் தயாரிப்பு, விடைத்தாள் பாதுகாப்பு, தேர்வு எழுதும் முறைகள், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்டவைக்கு, முக்கியத்துவம் கொடுத்து கண்காணித்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று வணிகவியல், புவியியல், மனையியல் தேர்வுகள் நடந்தது.
நாமக்கல் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த தேர்வர்களிடம் கேட்டபோது, "வணிகவியல் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது. பாட திட்டங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன. அதேபோல், வினாத்தாளில் எவ்வித குளறுபடியும் இல்லை" என்றனர்.
No comments:
Post a Comment