தமிழ் இலக்கணத்தை தெளிவாக கற்று கொண்டால், பிற மொழிகளை எளிதாக கற்க முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்" என ஊட்டியில் நடந்த தேசிய கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வரலாறு, சமூகவியல், மானுடவியல் துறையும், ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மையமும் இணைந்து, ஊட்டியில் நடத்திய "தொல் தமிழர் நாகரிகம்" குறித்த, மூன்று நாள் தேசிய கருத்தரங்கு, நேற்று நிறைவு பெற்றது.
நிறைவு விழாவில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி பேசுகையில், "மொழி அறிவு தான் அனைத்துக்கும் அடிப்படை. தமிழ் இலக்கணத்தை தெளிவாக அறிந்து கொண்டால், பிற மொழிகளை எளிதாக கற்று கொள்ள முடியும். இதனை மாணவர்கள் உணர வேண்டும்.
தமிழர்களில் பலர், தமிழ் பண்பாடுகளை பின்பற்றுவதில்லை. ஊட்டியில், அடுத்த ஆண்டுகளில், பிற மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த தமிழ் அறிஞர்களை கொண்டு, மிகப்பெரிய அளவில் கண்காட்சி, கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும்" என்றார்.
தமிழியல், கடலியல், தொல்லியல், கல்வெட்டு, நீரகழாய்வு உட்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். செம்மொழி தமிழாய்வு நிறுவன ஆய்வறிஞர் அரணமுறுவல் நன்றி கூறினார்.
தொல் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய, தேசிய கருத்தரங்கு, மிகச்சிறிய அரங்கில், இடம் தெரியாத இடத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
அரங்கின் அருகேயுள்ள அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவியரே பெரும்பாலும் அரங்கை நிரப்பினர். நீலகிரி உட்பட பிற மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து எந்தவொரு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கேற்கவில்லை.
தேசிய முக்கியத்துவம் பெற்ற இக்கருத்தரங்கில், மாவட்ட கலெக்டர் பங்கேற்பார், என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டிருந்தும், அவர் பங்கேற்கவில்லை. தவிர, மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்தவொரு அதிகாரியும் பங்கேற்கவில்லை.
எனவே, வருங்காலங்களில், நீலகிரியில் நடக்கும் இத்தகைய பயனுள்ள பயிலரங்கம் உட்பட நிகழ்ச்சியின் பலன்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மக்களை உரிய முறையில் சென்று சேரும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

No comments:
Post a Comment