பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக, தேறாத மாணவர்களை, "ஆப்சென்ட்' ஆக்கும் முயற்சியில், பல தலைமை ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்; இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தால், அதை விளம்பரம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, கட்டணத்தையும் அதிகரித்து விடுகின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை, தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அந்த பாடத்துக்கான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும், மாவட்டக் கல்வி நிர்வாகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியர்கள் மீது, சில நேரங்களில் நடவடிக்கை எடுப்பதால், பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகி உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம், கட்டாயக்கல்வி சட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்ட பின், மாணவர்களை, "பெயில்' ஆக்கவோ, இடையில் நிறுத்தவோ முடிவதில்லை. இதனால், 10ம் வகுப்பு வரை, "ஆல் பாஸ்' செய்து வரும் மாணவர்களில் பலரும், எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. அவர்களை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி விகிதத்தை குறைத்துக் கொள்வதை தவிர்க்க, தேர்வு எழுதாமல், ஆப்சென்ட் ஆக்கும் புது யுக்தியை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த, செய்முறை தேர்விலேயே, 10 சதவீதம் வரை, மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்; அவர்கள் அறிவியல் தேர்வு எழுதவும் முடியாது. அந்த மாணவர்களை தேர்வெழுத விடாமல், ஆப்சென்ட் செய்ய வைக்கும் நடவடிக்கையில், ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த போக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் கூறியதாவது: மாணவர்களை இடை நிறுத்தினால், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிஉள்ளதால், தேர்வு வரை மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்கின்றனர். சில தலைமை ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, தேறாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பதில்லை. மாணவர்களிடமும், "தேர்ச்சி பெற முடியாது என்பதால், நீ தேர்வில் கலந்து கொள்ளக் கூடாது' என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் செய்முறை தேர்விலேயே பலரும், ஆப்சென்ட் என, "கணக்கு' காட்டப்பட்டுள்ளனர். தேர்வில் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் பின்புலத்தை விசாரித்தாலே, பல அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் சுயரூபம் தெரியவரும். தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக, மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் போக்கு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment