நடகோட்டை நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தினால் ஏழு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் அடைவர்.
நடகோட்டையில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இக்கிராமத்தை சுற்றியுள்ள புதூர், சமையகவுண்டம்பட்டி, வத்தல்பட்டி, அக்கரைப்பட்டி, கணபதிபட்டி, வாடிப்பட்டி, லட்சுமிபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்நிலை வகுப்புகளுக்கு 6 கி.மீ., தூரத்தில் உள்ள விருவீடு மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர். சில கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் பலர் நடந்தே செல்கின்றனர். பஸ் வசதி உள்ள கிராமங்களில் கூட்ட நெரிசலில் மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். நடகோட்டை பள்ளியை தரம் உயர்த்தினால் இக்கிராம மாணவர்கள் பயன்பெறுவர். வரும் கல்வியாண்டில் நடகோட்டை பள்ளியை தரம் உயர்த்த கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment